இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: வில்லியம்சன் விலகல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான நான்காவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், 4வது போட்டி வெலிங்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல் 12:30 மணியளவில் தொடங்குகிறது.


Advertisement

Image

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணி வெற்றிக்கான வேட்கையில் உள்ளது. தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி வெற்றி வேட்டையை தொடரும் மு‌னைப்பில் விளையாடவுள்ளது.

Image result for southee


Advertisement

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 95 ரன்கள் குவித்த வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இன்றைய போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இன்றைய போட்டியல் நியூசிலாந்து அணியின் கேப்டனாக டிம் சவுத்தி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement