இதயங்களை வென்ற நியூசிலாந்தின் இளம்படை: வீடியோ!

Heartwarming-Moment-New-Zealand-U19-Players-Carry-WI---s-Kirk-McKenzie-Off-The-Field-After-He-Suffers-Cramp

கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் என்று கூறுவார்கள். அது உண்மைதான் என்பதை நியூசிலாந்து இளம்படையினர் மீண்டும் நிரூபித்துள்ளனர்.


Advertisement

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் கால் இறுதி போட்டியில் நியூசிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 49.4 ஓவர்களில் 239 ரன்கள் எடுத்து அரையிறுதிக்கு முன்னேறியது.

image


Advertisement

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தபோது அந்த அணியின் கிர்க் மெக்கன்சிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாட முற்பட்டார். பின்னர் கடுமையான வலியால் துடித்த அவர், பெவிலியனை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஆனால் அவரால் நடக்க முடியவில்லை. உடனடியாக அவரை அப்படியே தாங்கி தூக்கிய நியூசிலாந்து வீரர்கள் பெவிலியன் வரை கொண்டு சென்றனர்.

image

நியூசிலாந்து வீரர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement