JUST IN

Advertisement

"இதற்கு முன்பு சூப்பர் ஓவரில் விளையாடியதில்லை" - ரோகித் சர்மா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சர்வதேச டி20 போட்டிகளில் இதற்கு முன்பு சூப்பர் ஓவர்களில் விளையாடியதில்லை என்று ஆட்டநாயகன் விருது பெற்ற ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.


Advertisement

Image

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை சூப்பர் ஓவரில் வென்றது இந்தியா. இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 65 ரன்களை எடுத்தார். அத்துடன் சர்வதேச போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 10 ஆயிரம் ரன்கள் எட்டிய வீரர் என்ற மைல்கல்லை இன்றையப் போட்டியில் எட்டினார்.


Advertisement

Image

டி20 போட்டி சமனில் முடிந்தபோதும், சூப்பர் ஓவரில் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்தியாவின் தொடர் வெற்றிக்கு வித்திட்டார் ரோகித் சர்மா. இதனையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் "சர்வதேச அளவில் முதல் முறையாக சூப்பர் ஓவரில் விளையாடினேன். முதலில் இருந்தே அதிரடியாக விளையாடுவதா அல்லது ஒன்று இரண்டு ரன்கள் அடிக்கலாமா என்று குழப்பமாக இருந்தது. ஆனால் இறுதியில் எல்லாம் நல்ல விதமாகவே முடிந்தது" என்றார்.

Image


Advertisement

மேலும் தொடர்ந்த ரோகித் சர்மா " இன்று நான் நன்றாக விளையாடினேன். இன்னும் சிறிது நேரம் விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் நான் அவுட்டான விதம் எனக்கு வருத்தமே அளித்தது. இன்றையப் போட்டியில் வென்றுவிட்டால் தொடரை வென்றுவிடலாம் என எங்களுக்கு தெரியும். இதுபோன்ற முக்கியமான ஆட்டத்தில் அனைத்து வீரர்களின் பங்கும் இன்றும் சிறப்பாகவே அமைந்தது" என்றார் அவர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement