JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

நியூசிலாந்துக்கு ‘ஷாக்’ கொடுத்த சமி - சூப்பர் ஓவரில் 3வது டி20 போட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹாமில்டனில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி "டை"யில் முடிவடைந்தது. இதனையடுத்து இந்தப் போட்டி வெற்றி தோல்வியை நிர்ணியிக்கும் சூப்பர் ஓவருக்கு சென்றுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 3ஆவது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது.

Image

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 24 பந்துகளில் அரை சதம் கடந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலும் நிதானமாகவும் அதேசமயம் அதிரடியாகவும் ரன்களை சேர்த்து ஆடினார். பின்னர் கே.எல்.ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஷிவம் துபே 3 ரன்களில் வெளியேறினார்.

Image

இதனையடுத்து கேப்டன் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக ரன்களை சேர்த்தார். ஆனால் அவரால் இறுதி வரை விளையாட முடியவில்லை. இறுதியாக 27 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில் பென்னட் இந்தியாவின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Image

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்டின் குப்தில் 31 ரன்களுக்கும் மன்ரோ 14 ரன்களிலும் வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடினார். அடுத்தடுத்து வந்த சாண்ட்னர், கிராண்ட் ஹோம் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், தனி ஒருவனாக விரைவாக ரன்களை சேர்த்த வில்லியம்சன் 95 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இறுதி ஓவரில் கடைசி 1 பந்தில் 1 ரன் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் சமி வீசிய பந்தில் டெய்லர் அவுட்டானார் இதனையடுத்து ஆட்டம் டையில் முடிவடைந்தது.

Advertisement: