JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

இது மறக்க முடியாத அனுபவம் - ரஜினிகாந்த்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சியான ‘மேன் Vs வைல்ட் மூலம் பலராலும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடுகளுக்கு சென்று அதன் தன்மை குறித்தும் அங்கு வாழும் உயிரினங்கள் குறித்தும் விளக்கம் அளிப்பார். அவ்வப்போது பிரபலமானவர்களை தன்னுடன் அழைத்துச் செல்வதும் உண்டு. பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சி கோடிக்கணக்கானவர்களால் தொலைக்காட்சியில் பார்க்கப்பட்டது.

image

இந்நிலையில் ரஜினி, பியர் கிரில்ஸின் புதிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக இருவரும் கர்நாடகாவில் உள்ள காட்டுக்கு சென்றனர். அது தொடர்பான புகைப்படங்களூம் இணையத்தில் பரவியது. இதற்கிடையே இது குறித்து ட்வீட் செய்த பியர் கிரில்ஸ்,“ பிரதமர் மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி என்னுடைய Into The Wild With BearGrylls என்ற புதிய நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

image

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து ட்வீட் செய்த ரஜினிகாந்த், ''டிஸ்கவரி சேனலுக்கும், பியர் கிரில்ஸுக்கும் நன்றி. இது மறக்கமுடியாத அனுபவம்'' என தெரிவித்துள்ளார்.

Advertisement: