நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. அவரது கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், குற்றவாளிகள் நால்வரும் வருகிற ஒன்றாம் தேதி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிடும்.
நிர்பயா பாலியல் வழக்கில் நான்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு வருகிற ஒன்றாம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு எதிராக குற்றவாளிகள் ஒவ்வொருவராக சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
அதில் முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் கடந்த 17-ஆம் தேதி நிராகரித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முகேஷ் குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தூக்குத் தண்டனைக்காக காத்திருப்பவரின் வழக்கை விட வேறு எதுவும் அவசரமானதாக இருக்க முடியாது எனக் கூறி அதை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அம்மனு மீது நீதிபதிகள் அமர்வு இன்று முடிவெடுக்க உள்ளது. இதனிடையே, குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக டெல்லி திகார் சிறையில் மூன்றாவது முறையாக முன்னோட்டம் பார்க்கப்பட்டது.
விஷம் கலந்த தண்ணீர் அருந்தி 17 ஆடுகள், மாடு உயிரிழப்பு
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?