விஷம் கலந்த தண்ணீர் அருந்தி 17 ஆடுகள், மாடு உயிரிழப்பு

17-goat-and-cow-death-in-madurai

உசிலம்பட்டி அருகே மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பி வந்து நீர் அருந்திய 17 ஆடுகள், ஒரு மாடு துடிக்க துடிக்க உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை அதே ஊரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் அருகே உள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது.

image


Advertisement

இந்நிலையில் வீடு திரும்பிய ஆடுகள் வீட்டில் இருந்த நீரை அருந்திய சிறிது நேரத்தில் துடிதுடித்து அடுத்தடுத்து உயிரிழந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயப்பிரகாஷ் அக்கம் பக்கத்திருக்கு தகவல் அளித்தார்.

அப்போது அந்த வழியாக தனது மாட்டை அழைத்து கொண்டு வந்த ராமு என்பவர் ஆடுகளை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனிடையே ஆடுகள் அருந்திய நீரை ராமுவின் மாடும் அருந்தி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

image


Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த உத்தப்பநாயக்கணூர் போலீசார் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியர் செந்தாமரை ஆகியோர் விசாரனை நடத்தினர். விசாரணையில், ஆடுகள் அருந்திய நீரில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் குறித்து வழக்ககு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement