JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

U19 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலியிறுதிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற்ற சூப்பர் லீக் காலிறுதிப் போட்டியில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், சக்ஸேனா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சக்ஸேனா 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

       image

ஜெய்ஸ்வால் 62(82) ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், மிடில் ஆர்டரில் அங்கோலேகர் 55, ரவி பிஸ்னோய் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் மட்டுமே எடுத்தது.

        image

இதனையடுத்து, 234 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 17 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தது.

      image

இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர் ஃபன்னிங் நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தார். ஃபன்னிங் இறுதிவரை போராடிய நிலையில், அவர் 75 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.

image

இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் கார்த்திக் தியாகி 4 விக்கெட்டையும் ஆகாஷ் சிங் 3 விக்கெட்டையும் சாய்த்தனர்.

Advertisement: