JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு அமித்ஷாதான் கூறினார் - நிதிஷ் குமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் கூறினார் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வாக்களித்தது. ஆனால், அக்கட்சியின் துணைத் தலைவரும் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் சிஏஏ விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறுபாடான கருத்தினை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் இவ்வாறு பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நிதிஷ்குமார் பதில் அளித்துள்ளார்.

Image result for Prashant Kishor,  Nitish kumar, amit shah

அதில், “ஒருவர் கடிதம் எழுதினார். அதற்கு நான் பதில் அளித்தேன். ஒருவர் ட்விட் செய்கிறார். அவர் ட்விட் செய்யட்டும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?. ஒருவர் விரும்பும் வரை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருக்கலாம். அவர் விரும்பினால், கட்சியை விட்டு செல்லலாம். அவர் கட்சியில் எப்படி சேர்ந்தார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?. அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு அமித்ஷா என்னிடம் கேட்டுக் கொண்டார்” என்று கூறியுள்ளார்.

நிதிஷ் குமாரின் கருத்து குறித்து பேசியுள்ள பிரசாந்த் கிஷோர், “நிதிஷ் குமார் தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். என்னுடைய பதிலுக்காக காத்திருங்கள். நான் பீகாருக்கு வந்து என்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன்” என்றார்.

Advertisement: