கோயம்புத்தூர் மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானையை வனத்துறையினர் வனப்பகுதியில் விரட்டினர்.
கோவையில் உள்ள மதுக்கரை, கோவைப்புதூர், வெள்ளலூர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து விளைநிலங்களை நாசப்படுத்துவதோடு மட்டுமின்றி பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கோவையை அடுத்துள்ள கோவைப்புதூர் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு நுழைந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தது. இதையடுத்து, சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை தனது தந்தத்தால் முட்டி தள்ளியது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை போத்தனூர் மற்றும் வெள்ளளுர் பகுதியில் நுழைந்த காட்டு யானை தாக்கி 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்