JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

திருமண விழாவில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய புது மாப்பிள்ளை கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி திருமண விழாவை கொண்டாடிய புதுமாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு சென்று போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ‘ரூட் தல’ ஒருவரின் திருமண நிகழ்வில் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

image

அப்போது மணமக்கள் நின்ற மேடையில் ஏறிய மாணவர்கள் கும்பல், மணவிழாவை கொண்டாடும் வகையில் 3 அடி பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். அது மட்டுமில்லாமல் மற்றொரு மாணவன் பட்டாக் கத்தியோடு நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் வீடியோவை கொண்டு விசாரணை நடத்திய திருவேற்காடு போலீசார் புதுமாப்பிள்ளை புவனேஷை கைது செய்தனர்.

image

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டுக்கு விருந்துக்காக சென்றிருந்த நிலையில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ரவுடி பினு ஸ்டைலில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய சட்டக் கல்லூரி மாணவரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement: