JUST IN
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • BREAKING-NEWS ‌கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
  • BREAKING-NEWS ‌சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் - முதல்வர் பழனிசாமி

ஆஸ்கர் ரேஸில் முன்னிலை வகிக்கும் ‘தி ஐரிஷ்மேன்’... விருதுகளை அள்ளுமா..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செசி இயக்கிய ‘தி ஐரிஷ்மேன்’ திரைப்படம் ஜோக்கரை தொடர்ந்து ஆஸ்கர் ரேஸில் முன்னிலையில் உள்ளது.

image

1970-களில் புகழ்பெற்றிருந்த நிழல் உலகக் கதைகளை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘தி ஐரிஷ்மேன்’. புகழ்பெற்ற இயக்குநர் ஸ்கார்செசி மீண்டும் ஒருமுறை தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். அவருக்கு வயது 77. அவருக்கு விருப்பமான நடிகரான ராபர்ட் டி நிரோவுக்கும் ஜோ பெஸ்கிக்கும் 76 வயது. அல் பேசினோவுக்கு 79-வயதாகிவிட்டது. இந்த வயதிலும் அவர்களையே நாயகர்களாக நடிக்க வைத்திருக்கிறார் ஸ்கார்செசி. வயதைக் குறைத்துக் காட்டும் டி-ஏஜிங் தொழில்நுட்பங்கள் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன.

Image result for the irishman movie

ஒரு சரக்கு வாகன ஓட்டுநராக இருக்கும் நாயகன் எப்படி, நிழல் உலகக் கும்பலுடன் இணைகிறார், அதன் பிறகு எப்படி தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. தனது செயலுக்கு எந்த நியாயமும் தேவைப்படாத, எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாத சுத்தமான அடியாள் இந்தப் பாத்திரம். அதை கச்சிதமாகச் செய்திருக்கிறார் ராபர்ட் டி நிரோ. 1960-களில் அமெரிக்க அரசியலுக்கும் குற்றக் கும்பல்களுக்கும் இடையேயான தொடர்பையும் அதன் விளைவுகளையும் சொல்கிறது ‘ஐரிஷ்மேன்’. இதற்காக அந்தக் கால குற்றக் கும்பல்களைச் சேர்ந்தவர்களையே கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறார் ஸ்கார்செசி

10 பிரிவுகளில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. அதற்கேற்ற வருவாயையும் பெற்றிருக்கிறது. ஆஸ்கர் விழாவிலும் இந்த வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement: