JUST IN
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • BREAKING-NEWS ‌கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
  • BREAKING-NEWS ‌சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் - முதல்வர் பழனிசாமி

பயணிகள் ரயில் கட்டண வருவாய் சுமார் ரூ.400 கோடி குறைந்தது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரயில்வே துறையில் பயணிகள் கட்டண வருவாயானது சுமார் 400 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே துறை சார்ந்த சில தகவலை கேட்டுப் பெற்றுள்ளார். அதில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரயில் பயணிகள் கட்டணம் மூலம் 13 ஆயிரத்து 398 கோடியே 92 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. அதுவே ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் 13 ஆயிரத்து ‌243 கோடியே 81 லட்சம் ரூபாயாக குறைந்திருக்கிறது.

Image result for railway

பயணிகள் கட்டண வருவாயானது மூன்றாவது காலாண்டில் மேலும் சரிவு கண்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான‌ மூன்றாவது காலாண்டில் பயணிகள் கட்டண வருவாயானது 399 கோடியே 44 லட்சம் குறைந்து 12 ஆயிரத்து 844 கோடியே 37 லட்சம் ரூபாயானது தெரியவந்திருக்கிறது.

பண்டிகைக் காலங்களில் சரக்கு கட்டணங்களுக்கு கூடுதல் வரி ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதால் ரயில் சரக்கு கட்டண வருவாய் மூன்றாவது காலாண்டில் சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 32 கோடி ரூபாயாக உள்ளது.

Advertisement: