லீக் ஆனது ‘மாஸ்டர்’ ட்ராக்லிஸ்ட்? - படத்தில் எத்தனைப் பாடல்கள் தெரியுமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் ட்ராக்லிஸ்ட் விவரங்கள் வலைத்தளங்களில் லீக் ஆகி உள்ளது.


Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’. படத்தின் மூன்றாவது போஸ்டர் சமீபத்தில் வெளியானது. விஜய்யும், விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் காட்சியை படம்பிடித்துக் காட்டும் விதமாக அந்த போஸ்டர் அமைந்திருந்தது. இந்த போஸ்டர் வெளியான சில மணிநேரங்களில், நெட்டிசன்கள் இந்த போஸ்டருக்கு இணையான காட்சிகள் இடம்பெற்றிருந்த படத்தினை உலவவிட்டு ஒப்பீடு பதிவு போட்டனர். ஆகவே சமூக வலைத்தளங்களில் வழக்கத்தைவிட அதிகமாக அனல் பறந்தது. இப்போது இப்படம் குறித்து மேலும் சில தகவல்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன. ‘மாஸ்டர்’ படத்தின் ட்ராக்லிஸ்ட் தற்சமயம் லீக் ஆகிவிட்டதாக தெரிகிறது.

image


Advertisement

பொதுவாக ‘மாஸ்டர்’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு இணையாக ரசிகர்களின் ‘ஃபேன்மேட்’ செய்திகளும் அதிகமாக பரப்பப்பட்டு வருகின்றன. ரசிகர்களே அவர்களின் முயற்சியில் போஸ்டரை போட்டோஷாப் செய்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் தற்போது வெளியாகி உள்ள ‘ட்ராக்லிஸ்ட்’ உண்மை என்றே தெரிகிறது. ஏனெனில் கூகுள் தேடு பொறியில் ‘தளபதி64 சாங்ஸ்’ எனத் தட்டினால் தெளிவாக வருகிறது. அதில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

image

அந்த விவரங்களின்படி படத்தின் டைட்டில் சாங்கை அனிருத் பாடியுள்ளார். மேலும் ‘உடம்புல புல்லா திமிரு’ பாடலையும் இவரே பாடி உள்ளார். ‘வா வா என் எதிரில்’ பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி இருப்பதாக தெரியவந்துள்ளது. ’இங்க நான்’ பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து சித் ஸ்ரீராம் பாடி இருக்கிறார். ‘தளபதி கோட்டையில்’ பாடலை அந்தோணி தாஸும் ‘நான் வந்தா பட்டாசு வெடிக்கும்’ பாடலை நாகேஷ் அஸிஸும் பாடியுள்ளனர். இவை தவிர விஜய் மற்றும் வில்லன் விஜய்சேதுபதிக்கு ஒரு தீம் மியூசிக்கும் இடம் பெற்றுள்ளதாக ட்ராக்லிஸ்ட் லீக் ஆகியுள்ளது.  


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement