JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

 #TopNews | தமிழக மீனவர்கள் கைது முதல் மார்ச்சில் தொடங்கும் ஐபிஎல் திருவிழா வரை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி விவசாயிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில்‌ திமுக போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களின் ஒரு படகும் சிறைபிடிப்பு

image

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி உயர்நீதிமன்றக் மதுரை கிளையில் புதிய மனு. குடமுழுக்கு தொடர்பான அனைத்து வழக்குகள் மீதும் இன்று விசாரணை

தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக சந்திப்பு. பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல்

விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்த தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு திடீர் இடமாற்றம். டெண்டர் தொடர்பாக அழுத்தத்திற்கு உள்ளானதாக விமர்சனம் எழுந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை

தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதாக திருச்சி பாஜக பிரமுகர் கொலை குறித்து முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு. முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டி

கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை. மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளவரின் மனுவைவிட வேறு எதுவும் அவசரமானது இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

image

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் தீர்மானம். முறையற்ற நடவடிக்கை என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கடிதம்

3 தலைநகரங்கள் திட்டத்தை நிராகரித்ததையடுத்து ஆந்திராவில் மேலவையை கலைக்க சட்டமன்றத்தில் தீர்மானம். 133 உறுப்பினர்கள் ஆதரவு, தெலுங்கு தேசம் கட்சி வெளிநடப்பு

அசாமில் தனி மாநிலம்கோரி ஆயுதம் தாங்கி போராடிய போடோ அமைப்பினருடன் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து. இந்தியாவிற்கே சிறப்பான நாள் என பிரதமர் மோடி மகிழ்ச்சி

image

சீனாவில் கொரனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 82 ஆனது. அதிகம் பாதித்த வுஹான் நகரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வர மத்திய அரசு முயற்சி

ஐபிஎல் அதிரடி திருவிழா மார்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது. மே 24-ஆம் தேதி மும்பையில் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிப்பு

Advertisement: