ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை கோரி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


Advertisement

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு கடந்த ஜனவரி 16‌ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், இந்த அணுகுமுறையால் நிலத்தடி நீர்வளமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலையை உருவாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் மக்களின் கருத்துகளை கேட்காமல் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற தடை விதிக்குமாறும், மத்திய அரசின் சுற்றறிக்கைக்கும் தடை விதிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

‘இந்தியாவில் கொரனா பாதிப்பு இல்லை’ - மத்திய சுகாதாரத்துறை

loading...

Advertisement

Advertisement

Advertisement