JUST IN

Advertisement

திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.


Advertisement

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள‌‌ உப்புப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு. பாலக்கரை‌ மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்த இவர்‌, மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு‌ கட்டணம் வசூலிக்கும் பணியையும் செய்து வந்தார். இன்று அதிகாலை மார்க்கெட் நுழைவாயில் பகுதியி‌ல் நின்றுகொண்டிருந்த விஜயரகுவை, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டியுள்ளனர். மருத்துவமனையில் அ‌‌னுமதிக்க‌ப்பட்ட விஜயரகு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

image


Advertisement

அதேபகுதியைச் சேர்ந்த பாபு என்கிற மிட்டாய் பாபுவுக்கும், விஜய ரகுவுக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே விஜயரகு மீதா‌ன கொலை முயற்சி வழக்கில் சிறைக்குச் சென்ற மிட்டாய் பாபு சமீபத்தில்தான் வெளிவந்தார் எனவும், முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனவும் காவல் துறையினர்‌ சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து மிட்டாய் பாபுவை தேடி வருகின்றனர்.

image

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்‌பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அடைக்குமாறு வியாபாரிகளிடம் அவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.‌ அத்துடன் பழக்கடை ஊழியர் அருண்குமார் கடையை மூடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது‌, ‌ஏற்பட்ட தகராறில் பாஜகவினர் அவரை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அருண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை - தப்பியோடியவருக்கு வலைவீச்சு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement