JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

முன்னாள் உலகச் சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

18-ஆவது ஜிப்ரால்தா் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டா் ஆா்.பிரக்ஞானந்தா 6-ஆவது சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலகச் சாம்பியனான வெஸ்லின் டோபலோவை வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

Image result for veselin topalov vs praggnanandhaa

18-ஆவது ஜிப்ரால்தர் செஸ் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் மட்டும் பி.வி.நந்திதாவிடம் தோற்ற பிரக்ஞானந்தா அடுத்தடுத்த 5 ஆட்டத்தில் வெற்றிப் பெற்றார். சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா 5-ஆவது சுற்று ஆட்டத்தில் ரவி தேஜாவை வீழ்த்தினார். இதனையடுத்து நடைபெற்ற 6-ஆவது சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலகச் சாம்பியன் வெஸ்லின் டோபலோவை எதிர்த்து விளையாடினார்.

Image result for veselin topalov vs praggnanandhaa

பிரக்ஞானந்தா - வெஸ்லின் டோபலோ இடையிலான போட்டி 33 சுற்றுகள் நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெஸ்லின் டோபலோவை வீழ்த்தினார். ஜிப்ரால்தர் செஸ் போட்டியில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் 5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் பிரக்ஞானந்தா.

Advertisement: