இதே வேலையா போச்சே: ஆஸி.அதிர்ஷ்டம் மழையால் அவுட்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா - பங்களாதேஷ் அணிகள் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது.


Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், பங்களாதேஷூம் மோதின.

டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்தது. முந்தைய ஆட்டத்தில் சதம் விளாசிய தமிம் இக்பால், இந்தப் போட்டியில் திறமையாக ஆடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. ‌ஷாகிப் அல் ஹசன் மட்டும் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுத்தார். சிறப்பாக ஆடிய தமீம் இக்பால் 95 ரன்கள் சேர்த்தார். அந்த அணி 44.3 ஓவர்களில் 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 


Advertisement

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வார்னரும் பிஞ்சும் அடித்து ஆடத் தொடங்கினர். பிஞ்ச் 19 ரன்னில் ருபேல் ஹூசைன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆக, கேப்டன் ஸ்மித் வந்தார். அந்த அணி 16 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது வார்னர் 40 ரன்களும் ஸ்மித் 22 ரன்களும் எடுத்திருந்தனர். மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஏற்கனவே நடந்த ஆஸ்திரேலிய-நியூசிலாந்து ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இப்போதும் மழை ஆடியதால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பறிபோயுள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement