புலியிடம் தனி ஆளாக சிக்கிக் கொண்ட நபர் - பதற வைக்கும் வீடியோ காட்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புலிக்கு முன்னால் சிக்கிக் கொண்ட ஒருவர் சாமர்த்தியமாக உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.


Advertisement

மும்பை அருகே உள்ள பாந்தரா மாவட்டத்தில் உள்ள ஒரு வயல்வெளிக்குள் கடந்த சனிக்கிழமை புலி ஒன்று புகுந்துள்ளது. அங்கே நிலத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவரை சுற்றிவளைத்த புலி அவரைத் தாக்க சந்தர்ப்பம் பார்த்து காத்து கொண்டிருந்தது. சிக்கிக் கொண்ட நபரோ மிக சாமர்த்தியமாக தரையோடு தரையாக அசையாமல் அப்படியே படுத்து விட்டார். நபர் அசைவற்று இருந்ததால் புலி அவர் அருகே அமர்ந்து காத்து கொண்டிருந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் ஒன்றாகக் கூடி கூச்சலிடத் தொடங்கினர். சிலர் அருகே இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து சத்தம் போட்டனர்.

அபரிமிதமான சத்தத்தை கேட்ட புலி, செய்வது அறியாமல் அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தது. தொடர்ந்து கூட்டத்தினர் அருகே வருவதை அறிந்த அந்தப் புலி, பின் சாலையைக் கடந்து தெறித்தோடியது. அதன்பின் சிக்கிக் கொண்ட அந்த நபர் எழுந்து மிக இயல்பாக நடந்து செல்கிறார். இந்தக் காட்சியை கூடியிருந்த கூட்டத்தினர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதனை பர்வீன் கஸ்வான் என வனத்துறை அதிகாரி ட்விட்டரில் பதிவேற்றி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement