JUST IN
  • BREAKING-NEWS ‌குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்
  • BREAKING-NEWS ‌வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌சிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்

இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை - தப்பியோடியவருக்கு வலைவீச்சு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


புதுக்கோட்டை அருகே இயற்கை உபாதைக்குச் சென்ற இளம் பெண்ணை கடத்திச் சென்று, 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அறந்தாங்கி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் இயற்கை உபாதைக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர், இளம்பெண்ணை தூக்கிச் சென்று, தனது வீட்டில் வைத்து 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இளம்பெண் அடைத்து வைக்கப்பட்ட வீடு தனியாக இருந்துள்ள நிலையில், அவர் சத்தமிட்டும் வெளியே கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.

image

இந்த நிலையில் மகளை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது சம்பந்தப்பட்ட நபர், அவர்களிடம் தனது வீட்டில், அவர்களது மகள் இருப்பதாகக் கூறிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்ற சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டில், மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.


“சொத்தை அபகரிக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி கொடுமை”- ஐபிஎஸ் அதிகாரி மீது மனைவி புகார்


 

Advertisement: