JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்.. பைக் நம்பரை நோட் செய்து போலீஸுக்கு உதவிய பெண்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று நபர்களை இரண்டு மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் சந்தை கடையில் ரெட்டி என்ற பெண் இன்று காலை கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் அவரது கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு, தப்பி சென்றனர்.

image

நகையை பறிகொடுத்த ரெட்டி, இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து கல்லல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து விரைந்து செயல்பட்ட கல்லல் காவல்துறையினர் அருகில் உள்ள கிராம பகுதிகளில் பெண் கூறிய வாகன எண்ணை வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் வேப்பங்குளம் என்ற கிராமத்தில் நடத்திய சோதனையில் மணிகண்டன், அவரது நண்பர் வாணி கருப்பசாமி ஆகிய இருவரும் சிக்கினர்.

image

அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மூன்றாவது நபரான ஜோனெக்ஸ் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். மூவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement: