JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

ஜெயம் ரவிக்கு சகோதரியான த்ரிஷா? - ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜெயம் ரவிக்கு சகோதரியாக த்ரிஷா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் த்ரிஷாவும் ஜெயம் ரவியும் இணைந்து நடித்து வருகின்றனர். இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக வெளியாவிட்டது. இப்போது இந்தப் படத்தைப் பற்றிய ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு த்ரிஷா சகோதரியாக நடிக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் ‘சம்திங் சம்திங்’, ‘சகலகலா வல்லவன்’, ‘பூலோகம்’ உள்ளிட்ட படங்களில் ஏற்கெனவே ஜோடியாக நடித்துள்ளனர். அந்தப் படங்கள் நல்ல வெற்றியும் பெற்றிருந்தன. இந்நிலையில் ஜெயம் ரவிக்கு இவர் சகோதரியாக நடிப்பதை கேட்டு இவர்களது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இந்தத் தகவலை படக்குழு அதிகாரப்பூர்வாக இன்னும் வெளியிடவில்லை.

image

இப்போது மணிரத்னம் படத்தில் த்ரிஷா குந்தவையாக நடிக்கிறார். இவர் அருண்மொழி வர்மன் மற்றும் ஆதித்ய கரிகாலனின் சகோதரியாவார். இந்த இரு வேடங்களில் ரவியும் விக்ரமும் இணைந்து நடிக்க உள்ளனர். குந்தவைதான் படத்தின் நாயகி என்பதால் த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Image result for ponniyin selvan first look

மணிரத்னம் திரை வாழ்க்கையிலேயே மிக அதிகமான பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இதில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆதிதி ராவ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தினை ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன் தயாரித்து வருகிறது.

 

Advertisement: