காவிநிற முண்டாசுடன் பாரதியார்... குடியரசுத் தின ஊர்தியில் சித்திரம்

Bharathiyar-portrait-with-orange-colour-darban-on-Republic-Day

தேசிய கவி பாரதியார்‌, காவி நிறத்தில் முண்டாசு அணிந்திருப்பது போன்ற சித்திரம் பாடப்புத்தகத்தில் இடம்பெற்று சர்ச்சையான நிலையில், குடியரசு தின வாகன ஊர்தி அணிவகுப்பிலும் அதே சித்திரம் வலம் வந்தது.


Advertisement

image

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது, பல்வேறு துறைகளின் அலங்கார வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அப்போது பள்ளிக் கல்வித்துறையின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்தியும் அணிவகுப்பில் இடம்பெற்றது. வாகனத்தின் முகப்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ்ப் பாட புத்தக அட்டையின் மாதிரி இடம்பெற்று இருந்தது. அதில், பாரதியார் காவி வண்ணத்தில் முண்டாசு அணிந்திருப்பது போன்ற சித்திரம் இடம்பெற்றிருந்தது.


Advertisement

Image result for c subramania bharati

பன்னிரெண்டாம் வகுப்புக்கு வழங்கப்பட்ட தமிழ்ப் பாட புத்தகத்தில் பாரதியார் தலையில் கட்டியுள்ள முண்டாசு காவி நிறத்தில் இருந்தது ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. உள்நோக்கம் ஏதும் இல்லை என அப்போதே விளக்கம் அளித்திருந்த பள்ளிக் கல்வித் துறை, பாரதியாரின் முண்டாசின் நிறம் மாற்றி அச்சடித்து வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், சர்ச்சை‌க்குள்ளான அதே பாடப் புத்தகத்தின் அட்டை படத்துடன், குடியரசு தின அலங்கார ஊர்தி வலம் வந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement