JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

“நான் முஸ்லிம், என் மனைவி இந்து.. என் பிள்ளைகள் இந்தியர்கள்” - ஷாருக்கான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


என் குழந்தைகளுக்கு மதம் கிடையாது என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.

மும்பை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ப்ளஸ்5’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் சில முக்கியமான கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இன்று நாட்டில் மிக முக்கியமாக விவாதிக்கப்படும் பிரச்னை குறித்து அவர் மனம் திறந்து பேசினார். அவர் பேசும்போது, “நாங்கள் வீட்டில் இந்து - முஸ்லிம் பற்றி பேசியதே இல்லை. ஏனென்றால் என் மனைவி இந்து. நான் முஸ்லிம். என் குழந்தைகள் இந்தியர்கள்” என்றார். உடனே அரங்கமே அதிர்ந்தது. அந்தளவுக்கு கைத்தட்டல் சத்தம் அனைவரையும் ஈர்த்தது. அதன் பிறகு சில விஷயங்களை பேசினார் ஷாருக்கான்.

image

“என் மகள் ஒருமுறை மதம் குறித்து என்னிடம் கேட்டாள். அவளது பள்ளி படிவங்களில் மதம் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதற்காக அவள் கேட்டாள். ‘அப்பா நம்முடைய மதம் என்ன?’ என்றாள். நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள் என நான் எளிமையாக படிவத்தில் எழுதினேன்” எனக் கூறினார்.

Image result for shah rukh khan family

மேலும் அவர் “நான் தினமும் ஐந்து முறை தொழுகை செய்வதில்லை. ஆனால் நான் இஸ்லாமியன். நான் இஸ்லாத்தின் கொள்கைகளை நம்புகிறேன். அது ஒரு நல்ல மதம் மற்றும் அதில் நல்ல ஒழுக்கம் உள்ளது என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.  

 

Advertisement: