இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டி: நியூசிலாந்து பேட்டிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.


Advertisement

Image

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 இருபது ஓவர் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட்
போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் இருபது ஓவர் போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு தொடங்குகிறது.


Advertisement

Image

இந்தப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் களம் காண்கிறது.
ஆக்லாந்து ஈடன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இந்திய அணி: ரோகித் சர்மா, ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ரா, சாஹல், ஷமி.


Advertisement

நியூசிலாந்து அணி: மார்டின் குப்டில், காலின் மன்ரோ, வில்லியம்சன், டிம் செய்ஃப்ரட், ராஸ் டெய்லர், கிராண்டஹோம், சாண்ட்னர், டிம் சவுதி, இஷ்
சோதி, டிக்னர், பென்னட்

loading...

Advertisement

Advertisement

Advertisement