கோலா கரடிக் குட்டிகளுக்குப் பாலூட்டும் நரி - வைரலாகும் வீடியோ

Video-doesn---t-show-fox-breastfeeding-orphaned-koala-babies-in-Australia

ஆஸ்திரேலியா காட்டில் நரி ஒன்று கோலா கரடிக் குட்டிகளுக்குப் பாலூட்டும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.


Advertisement

ஆஸ்திரேலியாவில் உள்ள வனப்பகுதிகள் சமீபத்தில் தீக்கிரையாகின. இது தொடர்பான பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் அதில் போலியானவை அதிகம் என பிறகு தெரியவந்தது. அந்தச் செய்திகளில் போதிய அளவு உண்மை இல்லை என அறிந்த பிறகே வன ஆர்வலர்கள் மனத்தில் நிம்மதி பொருமூச்சு எழுந்தது.

image


Advertisement

இந்நிலையில், ஆஸ்திரேலிய வனப்பகுதி ஒன்றில் நரி ஒன்று குட்டிகளுக்குப் பாலுட்டும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அதான் ஆச்சரியம். தாயை இழந்து தவித்து வரும் கோலா கரடிக் குட்டிக்களுக்கு இந்த நரி பாலூட்டி பாதுகாத்து வருகிறது. ஆகவே அந்த வீடியோ நாட்டு எல்லைகளை மீறி மனிதநேயம் மிக்க பலரையும் ஈர்க்கத் தொடங்கி இருக்கிறது.


Advertisement

இந்த வீடியோவை அடர்ஷ் ஹெஜ்டே (Adarsh Hegde) என்பவர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் இந்த வீடியோவின் உண்மைதன்மை பற்றி அறிய கூகுளில் தேடிய போது, இந்தக் குறிப்பிட்ட வீடியோ 2014 ஆம் ஆண்டிலிருந்து வலைத்தளத்தில் சுற்றி வருவதாக தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை “Luc Durocher” என்பவர் 2014 ஆண்டு அவரது யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். குறிப்பிட்ட வீடியோவில் தெரிவது நரிக்குட்டிகள்தான். தூரத்தில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளதால் தெளிவாக இல்லை எனவும் கூறுகின்றனர். அவை நரிக்குட்டிகள் தான் என்ற வாதமும் தற்போது வலைத்தளத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.

ஒரு நரி வீடியோவின் உண்மைத்தன்மையை சோதிக்க எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது பாருங்கள்?

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement