[X] Close >

“என்னை இப்படி எதிர்பார்த்திருக்க மாட்டீங்க” - ‘சைக்கோ’ பட நாயகி நித்யாமேனன்

Nithya-thrilled-about-the-response-she-s-getting-for-her-eccentric-character-in-Psycho

‘சைக்கோ’ படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இன்ஸ்டா பக்கத்தில் நித்யாமேனன் கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement

மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சைக்கோ’. இந்தப் படத்திற்கு பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் பார்வையற்ற இளைஞராக உதயநிதி நடித்துள்ளார். மேலும் அவருடன் நித்யாமேனன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்தது குறித்து ஏற்கெனவே பேசி இருந்த நித்யா மேனன், “இது வழக்கமான கதாநயகி போல் இருக்காது. உடல்ரீதியாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் எனக் கூறியிருந்தார். ஆனால், இவர் சொன்ன விஷயம் எளிதில் புரிந்து கொள்ளும்படி இல்லை. காட்சி ரீதியாக பார்த்த பிறகே அவர் சொன்னதன் அர்த்தம் பலருக்கும் விளங்கி இருக்கிறது.

image


Advertisement

இந்நிலையில், தனது கதாபாத்திரம் குறித்து நித்யாமேனன் இன்ஸ்டாவில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “நான் ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்றிருந்த என்னுடைய விசித்திரமான கதாபாத்திரத்தை எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது பற்றி மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். ஏனென்றால் இதற்கு முன் இந்த வேடத்தில் என்னை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள். இல்லை என்றால் என்னிடம் இருந்து எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் உங்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் நீங்கள் அதை நேசித்தீர்கள் என புரிகிறது. அதை விரும்பி இருக்கிறீர்கள். எல்லா பாராட்டுக்களுக்கும் இயக்குநர் மிஷ்கின், பி.சி. ஸ்ரீராம் ஆகிய இருவருக்கும்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்ஸ்டாவில் மிஷ்கின் மற்றும் ஸ்ரீராம் புகைப்படங்களையும் இணைத்துள்ளார். 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close