JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

சென்னையில் 56% மாணவர்களுக்கு உயரத்திற்கேற்ற எடையில்லை: ஆய்வில் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் உள்ள 56% மாணவர்கள் உயரத்திற்கேற்ற எடையில்லாமல் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய அளவில், மாணவர்களின் உடல்நிலை குறித்து ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இதில், மாணவிகளை விட மாணவர்கள் சிறந்த உடல் நிறை குறியீட்டெண் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 49% மாணவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை பெற்றிருக்கும் நிலையில், 46% மாணவிகள் மட்டுமே உயரத்திற்கு ஏற்ற எடை பெற்றிருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

image

தேசிய அளவில், தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களை விட சிறந்த உடல் - நிறை குறியீட்டெண்ணை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, 47% தனியார் மாணவர்கள் சிறந்த உடல் எடை குறீயீட்டெண்ணை கொண்டுள்ளனர். ஆனால் 35% அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே சிறந்த உடல் நிறை குறீயீட்டெண்ணை பெற்றுள்ளனர்.

Advertisement: