JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

தேடிக்கொடுக்க சிரமம்: 24ஆயிரம் கடிதங்களை தன் வீட்டிலேயே பதுக்கிய தபால்காரர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வீடுகளைத் தேடிக் கண்டுபிடித்து கொடுக்க சிரமமாக இருந்ததால் 24ஆயிரம் கடிதங்களை தன் வீட்டிலேயே வைத்திருந்த தபால்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்

ஜப்பானின் டோக்யோ அருகேயுள்ள கனகவா பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது 61வயதான அந்த நபர் 2003ம் ஆண்டு முதல் பல கடிதங்களை தன் வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். சுமார் 24ஆயிரம் கடிதங்களை தன் வீட்டில் மலைபோல் குவித்து வைத்துள்ளார் அந்த நபர். பல கடிதங்களை காணவில்லை என ஜப்பான் தபால்துறை நடத்திய விசாரணையில் ஓய்வுபெற்ற தபால்காரர் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

image

வீடுகளைத் தேடிக் கண்டுபிடித்து கொடுக்க சிரமமாக இருந்ததால் 24ஆயிரம் கடிதங்களை தன் வீட்டிலேயே வைத்திருந்ததாக கைது செய்யப்ப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். மேலும், கடிதங்களை கொடுக்கமுடியவில்லை என்று தெரிந்தால் தான் திறனற்றவன் என உடன் பணிபுரிபவர்கள்
நினைத்துகொள்வார்கள் என்றும் அவர்கள் அப்படி நினைப்பதை தான் விரும்பவில்லை என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

image

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தபால்காரருக்கு 3 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என போலீசார்
குறிப்பிட்டுள்ளனர். தற்போது கைப்பற்றப்பட்ட கடிதங்கள் மன்னிப்பு கோரப்பட்டு உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


சந்திரிகா அழைத்தால் வரும் வகைவகையான ஆயிரம் பறவைகள்


 

Advertisement: