JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

ரஜினியுடன் இணையும் நடிகர் சித்தார்த் ? - ‘தலைவர் 168’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 ரஜினியுடன் இணைந்து நடிகர் சித்தார்த் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இன்னொரு சுவாரஸ்யமாக தகவல் கிடைத்துள்ளது. சாக்லெட் பாய் சித்தார்த், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் புதிய படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

image

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வந்தது. இந்த முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்தான் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதனிடையேதான், இந்தப் படத்தில் சித்தார்த் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் இவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.

Image result for thalaivar 168

சிவா இயக்கி வரும் படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. ஆகவே படம் குறித்த தகவல்கள் அனைத்து ‘தலைவர் 168’ என்றே பகிரப்பட்டு வருகிறது. இதனை சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரித்து வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் சேர்ந்து குஷ்பு நடித்து வருகிறார். அதே போல் மீனாவும் பல ஆண்டுகள் இடைவெளியில் ரஜினியுடன் இணைந்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதற்கான முறையான அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது.

கிராம கதைக் களத்தை கொண்டு உருவாகும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் எனத் தெரிய வருகிறது. 

 

Advertisement: