JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்திருப்பது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 18% அதிகமாகும்.

image

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை அளித்துள்ள புள்ளிவிவரம், அதில் 49% பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை தொடர்பானவை என குறிப்பிட்டுள்ளது. இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகவுள்ள 5 மாநிலங்களில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது

image

புதுப்புது வழிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வருவதாகவும், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் பாலியல் சீண்டல் தொடர்பாக கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு காரணம் என்ன ?

 

Advertisement: