கடந்த ஆண்டு 41-வது இடம்; இந்த ஆண்டு 51-வது இடம் - ஜனநாயக குறியீட்டில் பின்தங்கும் இந்தியா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சர்வதேச ஜனநாயக குறியீட்டில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.


Advertisement

தேர்தல் நடைமுறை மற்றும் பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாசாரம் மற்றும் குடிமக்கள் உரிமைகள் ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் சர்வதேச ஜனநாயக தரக் குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உலக நாடுகளில் ஜனநாயகத்தின் நிலை குறித்து ஆண்டுதோறும் தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட், தரக்குறியீட்டை வெளியிட்டு வருகிறது. அதில் கடந்த ஆண்டு 41-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை 10 இடங்கள் பின்தங்கி 51-ஆவது இடத்தில் இருக்கிறது.

image


Advertisement

குடிமக்கள் உரிமையில் ஏற்பட்ட சறுக்கலே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் நார்வேயும், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே ஐஸ்லாந்து மற்றும் சுவீடன் இடம்பெற்றுள்ளன. நியூசிலாந்து 4, பின்லாந்து 5-ஆவது இடத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 108ஆவது இடத்திலும், இலங்கை 69ஆவது இடத்திலும் உள்ளன.

image

வங்கதேசம் 80-ஆவது இடம்பிடித்துள்ள நிலையில், வடகொரியா கடைசி இடமான 167-ல் உள்ளது. ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மையினர் மீதான பாகுபாடு, மின்னணு கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் சீனா 153-ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.


Advertisement

இந்தியா, சீனா போல அமெரிக்காவும் வளர்ந்து வரும் நாடே: டொனால்ட் ட்ரம்ப்


 

loading...

Advertisement

Advertisement

Advertisement