JUST IN

கடினமான நேரத்திலும் வீரர்களை தாங்கிபிடிப்பார் தோனி - சேவாக்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தோனியின் தலைமையில் எல்லா வீரர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், எந்தவீரரை எந்த இடத்தில் இறக்குவது என்பதில் சரியான தெளிவு இருந்ததாகவும் மிகவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார் சேவாக்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று, உற்சாகத்தில் இருக்கின்றது இந்திய அணி. ஆனால், முதல் ஒருநாள் போட்டி முடிந்த போது இருந்த இந்திய அணியின் நிலையே வேறு. 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து பரிதாபமான நிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வெளுத்து வாங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

     image

நீண்ட வருடங்களுக்குப் பிறகு அப்படியொரு மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்தது. இருப்பினும், முதல் போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டு, அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. ஒருவேளை இந்திய அணி தொடரை இழந்திருக்கும் பட்சத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

      image

ஏனென்றால், எந்த வீரரை எந்த இடத்தில் களமிறக்குவது என்பதில் தொடர் முழுவதுமே ஒரு தெளிவு இல்லாமலே இருந்தது. ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை கேப்டன் விராட் கோலி வழக்கமாக மூன்றாம் நிலை வீரராக களமிறங்குவார். ஆனால், முதல் ஒருநாள் போட்டியில் மூன்றாம் நிலை வீரராக கே.எல்.ராகுலும், நான்காம் நிலை வீரராக விராட் கோலியும் களமிறங்கினர். முதல் போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கிய விராட் கோலி, அடுத்த இரண்டு போட்டிகளில் வழக்கம் போல் தன்னுடைய மூன்றாவது இடத்திலே விளையாடி அசத்தினார்.

       image

முதல் போட்டியில் மூன்றாம் நிலை வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல், இரண்டாவது போட்டியில் ஐந்தாவது வீரராக களமிறங்கினார். ஆனால், மூன்றாவது போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். கடைசி இரண்டு போட்டிகளில் ரிஷப் பண்ட் விளையாடாததால், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங்கும் செய்தார்.

       image

கே.எல்.ராகுல் எந்த இடத்தில் இறங்குவார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவே இல்லை. கீப்பராக இருக்கும் பட்சத்தில் ராகுல் 5-வது வீரராக களம் இறக்கப்படுவாரா அல்லது தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்படுவாரா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே உள்ளது. கே.எல்.ராகுல் எந்த இடத்தில் இறங்க சொன்னாலும் இறங்குகிறார், விக்கெட் கீப்பிங் செய்ய சொன்னாலும் செய்கிறார் என பலரும் கிண்டலாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

        image

இந்த நிலையில், இந்திய அணி முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் முக்கியமானதொரு கருத்தினை தெரிவித்து இருக்கிறார். அதாவது, தோனியின் தலைமையில் எல்லா வீரர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், எந்தவீரரை எந்த இடத்தில் இறக்குவது என்பதில் சரியான தெளிவு இருந்ததாகவும் மிகவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார் சேவாக்.

    image

இதுகுறித்து பேசியுள்ள வீரேந்திர ஷேவாக், கே.எல்.ராகுல் மாறி மாறி களமிறக்கப்படுவது குறித்து வெளிப்படையாக விமர்சித்துள்ளார். ஒருவேளை கே.எல்.ராகுல் 5வது இடத்தில் நான்கு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால், மீண்டும் அவரது இடத்தினை மாற்றுவார்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சேவாக். இதுபோன்ற நிலை தோனி கேப்டன்ஷிப்பில் இருந்ததில்லை என்றும், கடினமான நேரங்களில் வீரர்களுக்கு பக்கபலமாக இருப்பதன் முக்கியத்துவத்தை தோனி நன்கறிந்தவர் என்றும் சேவாக் கூறியுள்ளார்.

     image

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வது எளிது, ஆனால் மிடில் ஆர்டரில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு கேப்டனின் பக்கபலம் தேவை என்று கூறியுள்ள சேவாக், வீரர்களுக்கு உரிய வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், எப்படி அவர்கள் தவறுகளை சரிசெய்து கொண்டு பெரிய வீரர்களாக மாறுவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

        image

ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவதற்கு முன்பு மிடில் ஆர்டரில் களமிறங்கிய போது, தான் நிறைய தவறுகள் செய்ததாகவும் அதனால் நிறைய போட்டிகளில் இந்திய அணிக்கு தோல்வி கிடைத்ததாகவும் சேவாக் குறிப்பிட்டுள்ளார். பெஞ்ச்-ல் உட்கார்ந்தால் எப்படி பெரிய வீரராக மாற முடியும் எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement: