JUST IN
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • BREAKING-NEWS ‌கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
  • BREAKING-NEWS ‌சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் - முதல்வர் பழனிசாமி

‘கோலியின் ரன் எடுக்கும் தாகத்தை எதுவுமே தடுக்காது’ - ஸ்மித் புகழாரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விராட் கோலி வியக்கத்தக்க ஆட்டக்காரர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் கிரிக்கெட் உலகில் இன்றளவும் கொடிகட்டி பறக்கும் இரண்டு முக்கியமான வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் இருந்து வருகிறார்கள். கடந்த பல வருடங்களாகவே இருவரும் போட்டி போட்டி கொண்டு ரன்களை குவித்து வருகின்றனர். அதனால்தான் இருவரையும் ரன் மிஷன் என ரசிகர்கள் அழைக்கிறார்கள். ஐசிசி தரவரிசையிலும் இருவரும் முன்னிலையில் இருக்கின்றனர்.

File image of India skipper Virat Kohli and Steve Smith (L)

இந்நிலையில், விராட் கோலி குறித்து ஸ்டீவ் ஸ்மித், மனம் திறந்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். “ஆமாம், கோலி வியக்கதக்க வீரர். அவரது பேட்டிங் வரிசை அவரைப் பற்றி பேசும். மூன்றுவிதமான ஆட்டங்களிலும் அவர் நம்பமுடியாத வீரராக திகழ்கிறார். மேலும் அவர் பல சாதனைகளை முறியடிப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஏற்கனவே ஏராளமான சாதனைகளை உடைத்துவிட்டார்.

அவர் பல சாதனைகளை முறியடிப்பதை பல ஆண்டுகளாக நான் பார்த்து வருகின்றேன். அவர் ரன்களை பெறுவதில் பெரும் பசியோடு இருக்கிறார். அப்படி அவர் ரன் குவிப்பதை நிறுத்தவேயில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் ரன்களை பெறுவதை தடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அது எங்களுக்கு நல்லதாக இருக்கும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

 

Advertisement: