மோகன் லாலுடன் மோதும் ஜாக்கி சான் ? - தயாராகும் பிரம்மாண்ட வரலாற்று கதை

Mohanlal-to-share-screen-space-with-Jackie-Chan-

மலையாள நடிகர் மோகன் லாலுடன் ஒரு படத்தில் ஜாக்கி சான் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

உலக அளவில் அதிகம் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான். இவரது சண்டைக்காட்சிகளை கான்பதற்கே உலகம் முழுவதும் லட்சக்கணகான ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீப காலமாக அதிகமான திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஆனாலும் அவரது மார்கெட் வேல்யூ இன்னும் குறைந்துவிடவில்லை.

image


Advertisement

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் ஜாக்கி சான் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கேரள ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. ‘நாயர் சன்’ என்ற படத்தில்தான் மோகன் லால், ஜப்பான் நடிகர் ஜாக்கி சானுடன் இணைந்து நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்தப் படத்தினை ஆல்பர்ட் ஆண்டனி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மோகன்லால் இந்தப் படத்தில் அய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் வேடத்தில் நடிக்க இருக்கிறார். அய்யப்பன் பிள்ளை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்தப் படத்தின் கதை சுதந்திரத்திற்கு முன்பாக நடைபெற்ற வரலாற்றை கொண்டு உருவாக உள்ளது. இந்தப் படத்தில் ஜாக்கி சான் இணைந்தால் மல்லுவுட் திரை உலகில் ஒரு மைல் கல் சாதனையாக அமையும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

image


Advertisement

ஆகவே மோகன் லால் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகருடன் உலக அளவில் பேசப்படும் ஒரு நடிகர் இணைய உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். ஆனால் இது குறித்து இயக்குநர் தரப்பில் இருந்தோ அல்லது தயாரிப்பாளர் தரப்பில் இருந்தோ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மோகன் லால் தற்சமயம், ஜித்து ஜோசப் இயக்கி வரும் ‘ராம்’ படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார்.

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement