JUST IN

Advertisement

வேலைக்கு சென்ற தோழி - தனியாக இருந்த இளம்பெண் மர்ம மரணம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஞ்சிபுரத்தில் தனியாக வீட்டில் இருந்த இளம்பெண் உடல் மற்றும் கண்ணத்தில் கீறல்கள் இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகேயுள்ள ஆதனஞ்சேரி பெரியார் தெருவில் வசிப்பவர் அருண் பிரசாத் (33). இவரது வீட்டில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கரீனா பிரியதர்ஷினி (21) மற்றும் ரஞ்சிதா (22) ஆகிய இருவரும் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இருவரும் ஒரகடம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 6 மணியளவில் ரஞ்சிதா வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் கரீனா பிரியதர்ஷினி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

image


Advertisement

ரஞ்சிதா வேலை முடிந்த பின்னர், மாலை 4 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கரீனா தூங்கிய நிலையில் இருந்துள்ளார். ரஞ்சிதா அவரை தட்டி எழுப்பியபோது, பேச்சு மூச்சு இல்லாமல் இருந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சிதா உடனே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்துவிட்டு கரீனா இறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

image

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீஸார் கரீனா உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இறந்த பெண்ணின் உடல் மற்றும் கண்ணத்தில் கீறல்கள் மற்றும் கழுத்து சிவந்த நிலையில் இருந்ததால், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணிஷ் என்பவரை காதலித்து வந்ததும், அவர் இப்பெண்ணை கொலை செய்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Advertisement

மக்களை அச்சுறுத்தும் கொரானோ வைரஸ்: சர்வதேச அளவில் பீதி

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement