JUST IN
  • BREAKING-NEWS ‌குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்
  • BREAKING-NEWS ‌வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌சிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்

“தேவையில்லாததை பேசுவதற்கு பதில் ரஜினி மவுனமாக இருக்க வேண்டும்” - ஜெயக்குமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேவையில்லாததை பேசுவதற்கு பதிலாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 14-ஆம் தேதி துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் 1971-ல் சேலத்தில் நடந்த நிகழ்வு குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகாரளிக்கப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் விளக்கமளித்தார். “ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். எனவே 1971-இல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல. மறக்க வேண்டிய சம்பவம்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

Image result for ரஜினி பெரியார்

இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கிய பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதற்கு தக்க நேரத்தை எதிர்பார்த்து இருப்பதாக அமைச்சர் பாஸ்கர் தெரிவித்துள்ளது அவருடைய கருத்தாக இருக்கலாம். கட்சியின் கருத்து இல்லை.

நடைபெறாத ஒரு விஷயத்தை கூறி ரஜினி ஏன் மக்களை திசை திருப்ப வேண்டும் என தெரியவில்லை. அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவருக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை நாங்கள் கண்டித்து குரல் கொடுப்போம். ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பது தான் அதிமுகவின் கொள்கை. 1971ல் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என துக்ளக்கின் சோவே கூறியுள்ளார். தேவையில்லாததை பேசுவதற்கு பதிலாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும். ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம். ஆனால் அதிமுக பயப்படாது” எனத் தெரிவித்தார்.

Advertisement: