“பாஜகவிடம் இருந்து எந்த நேரம் விலகலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” - அமைச்சர் பாஸ்கரன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாஜகவிடம் இருந்து எந்த நேரத்தில் தனியாக பிரிந்து செல்லலாம் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பதாக என தமிழக கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


Advertisement

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.

அப்போது, “பாஜகவிடம் இருந்து எந்த நேரத்தில் தனியாக பிரிந்து செல்லலாம் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லோரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீங்கள் எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம். நீங்கள் எம்எல்ஏ தேர்தலில் எங்களுக்கு ஓட்டுபோடவில்லை.


Advertisement

Image result for அமைச்சர் பாஸ்கரன்

மாவட்ட நிர்வாகமே என் கையில் இருக்கிறது; யாராவது அத்துமீறி நடந்துள்ளதாக சொல்ல முடியுமா? உள்ளாட்சி தேர்தல் எங்கள் கையில் இருந்தது. 5 ஓட்டுகள் 3 ஓட்டுகளில் எத்தனையோ பேர் தோற்றுபோய் உள்ளனர். அதை நாங்கள் சொல்லி வெற்றி என அறிவித்திருக்கலாமே. அதை நாங்கள் செய்யவில்லை.

முதல்வர் எந்த வேலையையும் சரியாக செய்ய சொல்லியுள்ளார். அதிமுக தான் மக்களின் அரசு. நாங்கள் சாதாரண மனிதர்கள். நீங்கள் எங்களை எப்போதும் அணுகலாம். நீங்கள் எம்எல்ஏவையும், என்னையும் சட்டையை பிடித்து கேட்கலாம். பிரசாரத்தில் பேசியதுபோல் செய்துதரவில்லையே என்று. ஆனால் இதேபோல் காங்கிரசையும் திமுகவையும் கேட்க முடியுமா? சந்திக்க முடியுமா? எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியுமா?” என அமைச்சர் பாஸ்கரன் கேள்வி எழுப்பினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement