சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் பிரித்திகா(8) அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சிறுமி, சற்று நேரத்திற்கு பின் வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற குழந்தை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை சுந்தரம் மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காலையில் முட்புதர்களுக்கு நடுவே சிறுமி ஒருவர் ஆடைகள் கிழிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் கொலைசெய்யப்பட்ட சிறுமி காணாமல் போன சிறுமி பிரித்திகா என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Loading More post
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
அமமக கூட்டணியில் ஓவைசியின் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
அதிமுக தேர்தல் அறிக்கை... ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை