JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

“பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்திற்குரியது” - அமைச்சர் ஜெயக்குமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கருத்திலேயே முரண்பாடாக உள்ளார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் பேசிய விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த ஜெயக்குமார், “பழைய நிகழ்வுகளை பற்றி பேசி ஆராய்ச்சி செய்வதால் ரஜினிகாந்திற்கு என்ன பி.ஹெச்.டி பட்டமாக கொடுக்கப் போகிறார்கள். இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என அதை ஞாபகப்படுத்தி தன்னுடைய கருத்திலேயே ரஜினி முரண்பாடாக உள்ளார். அனைவரும் மதிக்கும் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.

image

முன்னதாக, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், “ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். எனவே, 1971ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்க வேண்டிய சம்பவம்" என்று தெரிவித்திருந்தார்.

வாழைப்பழத்தை நீங்களே உரியுங்கள் - பாராட்டுகளை பெற்ற டென்னிஸ் நடுவர்

Advertisement: