சூடானில் ஊட்டச்சத்து இல்லாமல் எலும்பும் தோலுமாக காட்சி தரும் 5 சிங்கங்களின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, உலகம் முழுவதும் இருந்து இணையதளவாசிகள் கண்ணீருடன் குரல்கள் கொடுத்து வருகின்றனர்.
சூடான் தலைநகரான கார்டூமில் உள்ளது அல் குரேஷி உயிரியல் பூங்கா. அங்கு பராமரிக்கப்பட்டு வரும் 5 சிங்கங்கள் எலும்பும் தோலுமாக, மிகவும் மோசமான நிலையில் தோற்றமளிக்கின்றன. சிங்கங்கள் என்பதற்கான அடையாளமே இல்லாமல் சாவின் விளிம்பில் அவை உள்ளன. வழக்கமாக சிங்கங்களைப் பார்த்து பிரமிக்கும் பார்வையாளர்கள், அல் குரேஷி பூங்காவில் உள்ள சிங்கங்களைப் பார்த்து வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர்.
போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்படாததே சிங்கங்களின் இந்த அவலநிலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ஊட்டத்துள்ள உணவுகள் வழங்கப்படவில்லை என உயிரியல் பூங்காவை பராமரிக்கும் கார்டூம் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், 5 சிங்கங்களை உயிருடன் காக்க வேண்டுமென்ற கோரிக்கை உலகம் முழுவதும் வலுத்துள்ளது. Save Animal rescue என்ற ஹேஷ்டேக் இணையதளத்தில் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!