JUST IN
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • BREAKING-NEWS ‌கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
  • BREAKING-NEWS ‌சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் - முதல்வர் பழனிசாமி

போரில் காணாமல்போன ஆயிரக்கணக்கானோர் மரணம்: இலங்கை அதிபர் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான யுத்தத்தில் காணாமல்போன ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்டதாக முதன்முறையாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

image

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. 2009-ஆம் ஆண்டு நடந்த உச்சக்கட்ட போரின் இறுதியில் பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வெளியானது. இந்தப் போரின்போது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயினர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன ஆனார்கள் என்பது குறித்த எந்த விவரங்களும் கிடைக்காததால் அவர்களது உறவினர்கள் குழம்பி போய் தவித்து வந்தனர்.

இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து ஐநாவின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கரிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, கடந்த கால போர் குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளதாக அரசுத் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன. அதில், முப்பது ஆண்டுகால யுத்தத்தில் காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக அதிபர் கோத்தபய ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தனை ஆண்டுகள் கடந்து இந்தத் தகவலை அரசு முதன்முறையாக உறுதி செய்துள்ளது.

image

இலங்கை அரசாங்க புள்ளி விவரங்களின்படி, நாட்டில் நடந்த பல்வேறு மோதல்களால் 20,000-க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனத் தெரியவந்துள்ளது. வடக்கு மற்றும் இலங்கை கிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்களுடனான 30 ஆண்டுகால பிரிவினை யுத்தத்தில் குறைந்தது 100,000 உயிர்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement: