JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

விஜயகாந்த் பேசியது அவதூறானவையே : கடுமையாக எச்சரித்த உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில் தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Image result for உயர்நீதிமன்றம்

அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மேல் முறையீட்டு மனுவை திரும்பப்பெற அனுமதி கோரினார். இதையடுத்து, மேல் முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதம் விதிக்கலாம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே எனத் தெரிவித்த நீதிபதிகள், எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினர். அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க இது இடமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதால், அபராதம் விதிப்பதை தவிர்ப்பதாக கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்று செயல்படக் கூடாது எனவும் மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

Advertisement: