JUST IN
  • BREAKING-NEWS ‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்தியாவிற்கு எந்த பலனும் இருக்காது..! - சுப்பிரமணியன் சுவாமி
  • BREAKING-NEWS ‌கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‌இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துனை ஆணையர் நாகஜோதி நியமனம்
  • BREAKING-NEWS ‌சிஏஏ, என்பிஆர் சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS ‌’கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு
  • BREAKING-NEWS ‌இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

சிறார் ஆபாச பட விவகாரம்: போலீஸ் விசாரணையில் 600 பேர் பட்டியல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறார் ஆபாச பட விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் திரட்டப்பட்ட 600 ஐபி முகவரிகளை வைத்து காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல்போன மற்றும் சுயநலத்திற்காக பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான தேசிய மையம் கொடுத்த தகவலின் அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அம்மையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற பட்டியலின் அடிப்படையில், சென்னையில் 150க்கும் மேற்பட்ட ஐபி முகவரிகளில் இருந்து சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

image

மேலும், கோவையில் 40 பேரும், திருச்சியில் 20 பேரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். மாவட்டங்கள் வாரியாக பிரிக்கப்பட்ட ஐ.பி முகவரிகள், சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


விபத்து மற்றும் தற்கொலையால் 2,200 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு


 

Advertisement: