[X] Close

தற்கொலை படை தாக்குதல் முயற்சி: தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு

Subscribe
4-Terrorists-Killed-In-Attack-On-CRPF-Camp-In-Jammu-And-Kashmir-s-Bandipora

ஜம்மு & காஷ்மீர் மாநிலம் பந்திபோரா பகுதியில் சி.ஆர்.பி.எப். நிலைகள் மீது தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர் சுட்டுக் கொன்றனர். சி.ஆர்.பி.எப். முகாமை தற்கொலை தாக்குதல் நடத்தி அழிக்கும் அவர்களின் முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுள்ளது.


Advertisement

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள 45வது பட்டாலியன் சி.ஆர்.பி.எப். முகாம் மீது இன்று அதிகாலை 4:10 மணியளவில் நான்கு தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். ஏ.கே.47 துப்பாக்கிகள், எண்ணற்ற கிரானைட் வெடிகுண்டுகள், பெட்ரோல் கேன்களுடன் இந்த தாக்குதல் நடந்துள்ளது. முகாமுக்கு காவலாக இருந்த பாதுகாப்பு வீரர் கொல்லப்பட்டார். ஆனால் விரைந்து செயல்பட்ட படையினர், தாக்குதலில் ஈடுபட்ட நான்கு தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.

நடந்த சம்பவத்தை டி.ஜி.பி. ஷேஷ் பால் வைத் உறுதிப்படுத்தினார். மேலும், சி.ஆர்.பி.எப். வீரர்களின் துரிதமான எதிர்தாக்குதலைப் பாராட்டினார். தீவிரவாதிகளை தோற்கடித்த வெற்றிக் களிப்பில் படையினர் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிட்டனர்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close