இயற்கையை ரசிக்க சுற்றுலா சென்ற குடும்பம் - வனத்துறை படகு கவிழ்ந்து சிறுவன் பலி

Family-going-vacation--But-unfortunately-fall-the-board-and-die-a-Boy

ராமநாதபுரத்தில் வனத்துறையின் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 5 வயது சிறுவன் உயிரிழந்தார்.


Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள உசிலனகோட்டையைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர், காரங்காடு சதுப்பு நில காடுகளை சுற்றிப் பார்க்க வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்றனர். இயற்கை காட்சிகளை ரசித்து விட்டு திரும்பியபோது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இதில் 5 அடி ஆழத்தில் தத்தளித்த 7 பேரும், 2 சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

image


Advertisement

ஆனால் உசிலனகோட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன் விஸ்வ அஜித் (5) வாய் வழியாக தண்ணீர் அதிகம் புகுந்த நிலையில், மயக்க நிலைக்கு சென்றார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனின் உடல், திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

image

இதுகுறித்து தேவிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, படகு கரை திரும்பியபோது அனைவரும் ஒரு பக்கமாக அமர்ந்து பயணித்ததால், பாரம் தாங்காமல் கவிழ்ந்திருக்கலாம் என தெரிவித்தனர்.


Advertisement

பயமுறுத்தும் கொரனோ ! உலக நாடுகள் அஞ்சுவது ஏன் ?

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement