JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

வேலை தொடர்பாக முன்விரோதம்: இளைஞர் கொலை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த இவரும், இதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் அக்காள் கணவர் முனுசாமி என்பவரும் சேர்ந்து இறப்பு நிகிழ்ச்சிகளில் டிரம்ஸ் அடித்து வந்தனர். இந்த வேலை நிமித்தமாக இருவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், வெளியூருக்குச் சென்று வேலை பார்த்து வந்த மணிகண்டன், பொங்கல் விழாவுக்காக மயிலாடுதுறைக்கு வந்துள்ளார்.

image

இந்நிலையில், மணிகண்டன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த முனுசாமி, அவருடைய நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முனுசாமியும் அவரது நண்பர்களும் சேர்ந்து மணிகண்டனை ஓடஓட விரட்டி வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டனின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.

image

இதையடுத்து, மயிலாடுதுறை போலீஸார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இறந்துபோன மணிகண்டன், தேடப்படும் குற்றவாளியான முனுசாமி ஆகிய இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு வேறு ஒருவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement: