டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

இந்தப் பட்டியலில் 10 பெண்கள், நான்கு இஸ்லாமியர்கள் உட்பட 54 பேர் இடம்பெற்றுள்ளனர். 33 புதிய வேட்பாளர்களும் உள்ளனர். டெல்லி காங்கிரஸ் செயல் தலைவர்கள் ராஜேஷ் லிலோதியா மங்கோல் புரி தொகுதியிலும், தேவேந்திர யாதவ் பத்லி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பட்டியல் வெளியிடுவதற்கு சற்று முன்பாக ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அந்தக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஆதர்ஸ் சாஸ்த்ரி, துவாரகாவில் போட்டியிடுகிறார்.

Image result for delhi assembly


Advertisement

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சிக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட பட்டியல் இன்று இரவு அல்லது நாளை காலை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image result for election ink

மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பரேவைக்கான தேர்தல் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement