தமிழகத்தில் அதிக அளவு 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தமாக 54 ஆயிரத்து 776 போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், 12 ஆயிரத்து 560 போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்ததாக மேற்கு வங்கத்தில் 9 ஆயிரத்து 615 போலி இரண்டாயிரம் ரூபாய் தாள்களும், கர்நாடகாவில் 6 ஆயிரத்து 750 ரூபாய் போலி தாள்களும், டெல்லியில் 6 ஆயிரத்து 457 போலி ரூபாய் தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மிசோரமில் 3 ஆயிரத்து 494 போலி இரண்டாயிரம் ரூபாய் தாள்களும், குஜராத்தில் 2 ஆயிரத்து 722 ரூபாய் போலி தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல, அனைத்து ரூபாய் தாள்களில் போலி நோட்டுகள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டதில் டெல்லி முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் குஜராத் மற்றும் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளன. அனைத்து மதிப்பிலான பணங்களில் டெல்லியில் 67 ஆயிரத்து 324 போலி ரூபாய் தாள்களும், குஜராத்தில் 28 ஆயிரத்து 855 போலி ரூபாய் தாள்களும், தமிழ்நாட்டில் 24 ஆயிரத்து 715 போலி ரூபாய் தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல, மகாராஷ்டிராவில் 20 ஆயிரத்து 802 போலி ரூபாய் நோட்டுகளும், உத்தரப் பிரதேசத்தில் 19 ஆயிரத்து 109 ரூபாய் நோட்டுகளும் ஆந்திராவில் 17 ஆயிரத்து 493 ரூபாய் நோட்டுகளும் போலியானவை எனக் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’